கோவம்ச பண்டாரம்


                          மகான் அருள்மிகு மயிலாப்பூர் குழந்தையானந்தர் 

 அறிமுகம் : 

கோவம்ச பண்டாரம் அல்லது கோவணாண்டி பண்டாரம் கொங்கு பகுதியில் வாழும் பண்டாரம் மக்களின் பிரிவாகும். இவர்கள் மயிலாப்பூர் குழந்தையானந்தர் என்னும் சைவ மதத்தை சேர்ந்த சித்தரை தங்களின் குலகுருவாக ஏற்றுகொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் கொங்கு பகுதியில் இருக்கும் அம்மன் கோவில்களில் பூசை மேற்கொள்ளும் மரபினர். பொதுவாக கொங்கு பகுதியில் வாழும்  மக்கள் தங்களுக்குள் உள்ள நாட்டு பிரிவுகள் கொண்டே திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.அதுபோல இவர்களும்  தங்களுக்குள் உள்ள நாட்டு பிரிவுகள் படியே திருமணம் முதலிய நிகழ்ச்சிகளை  நடத்துகின்றனர். 

கோவம்ச ஆண்டிபண்டாரம் (கோமானாண்டி,கொங்கு பண்டாரங்கள் ) நாட்டு பிரிவுகள் :

1. பூந்துறை நாடு - ஈரோடு, திருச்செங்கோடு, வட்டங்கள்

2. தென்கரை நாடு - தாராபுரம், கரூர், வட்டப்பகுதிகள்

3. காங்கேய நாடு - தாராபுரம், காங்கேயம் பகுதிகள்

4. பொங்கலூர் நாடு - பல்லடம், தாராபுரம் வட்டப்பகுதிகள்

5. ஆரை நாடு - கோவை, அவினாசி, வட்டப்பகுதிகள்

6. வாரக்கா நாடு - பல்லடம், பொள்ளாச்சி வட்டப்பகுதிகள்

7. திருஆவின் நன்குடி நாடு - பழனி, உடுமலை, வட்டப்பகுதிகள்

8. மணநாடு - கரூர், வட்டம் தெற்கு பகுதி

9. தலையூர் நாடு - கரூரின் தெற்கு, மேற்குப் பகுதிகள்.

10. தட்டயூர் நாடு - குளித்தலை வட்டம்

11. பூவாணிய நாடு - ஓமலூர், தர்மபுரி வட்டப்பகுதிகள்

12. அரைய நாடு - ஈரோடு, நாமக்கல், பகுதிகள்.

13. ஒடுவங்கநாடு - கோபி வட்டம்

14. வடகரைநாடு - பாவனி வட்டம்

15. கிழங்கு நாடு - கரூர், குளித்தலை வட்டம்

16. நல்லுருக்கா நாடு - உடுமலைப்பேட்டை

17. வாழவந்தி நாடு - நாமக்கல் வட பாகம், கரூர்

18. அண்ட நாடு - பழனி வட்டம் , தென்கீழ்ப்பகுதி

19. வெங்கால நாடு - கரூர் வட்டம் , கிழக்குப்பகுதி

20. காவழக்கால நாடு - பொள்ளாச்சி வட்டம்

21. ஆனைமலை நாடு - பொள்ளாச்சி தென்மேற்கு

22. இராசிபுர நாடு - சேலம், ராசிபுரம், கொல்லிமலை

23. கஞ்சிக் கோயில் நாடு - கோபி, பவானிப் பகுதி

24. குறும்பு நாடு - ஈரோடுப் பகுதி

 

விளக்கம் :


கொங்க பண்டாரம்
கொங்க பண்டாரம் - கோமானாண்டி/உவச்சாண்டி/பூவாண்டி/மொடவாண்டி

கோமானாண்டி - கோவில் பணிகள் செய்பவர்
உவச்சாண்டி - கோவிலுக்கு சமையல் பணிகள் செய்பவர்
பூவாண்டி - இறைவனுக்கு பூக்கட்டுபவர்
மொடவாண்டி - முட குழந்தைகளை காக்கும் பொறுப்பு உடையவர்கள். கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு, பணிகள் செய்பவர்கள். முடவாண்டி பட்டயம் காண்க.

கொங்க தேசத்தில் கோவிலுக்குள் இறைவனின் பணிகளுக்கு முழு பொறுப்பும் உரிமையும் பண்டார மக்களுக்கே உரியது. அந்த காணிக்குரிய பரம்பரை பண்டாரம் பூசை செய்தால் தான் இறைவனே மனம் குளிர்ந்து ஏற்று கொள்வார்.

கொங்க வெள்ளாளரில் கன்ன கூட்டத்தார் தலைய நாட்டில் பள்ளிகளோடு ஏற்பட்ட பிரச்சனையின் பின்பு மிகுந்த உதவி செய்தவர்கள் பண்டார வகையறா. நல்லராண்டி பண்டாரம் பட்டக்காரர் மகனான முத்துசாமி கவுண்டரை வளர்த்து மீண்டும் பட்டக்காரர் ஆக உதவி புரிந்தார். பட்டகாரர்கள் இல்லாத போதும் காணியாச்சி கோவில் பூசைகளை சரிவர செய்து வந்தார். முத்துசாமி கவுண்டர் திருமணத்தின் போதும் உதவி செய்தவர். அவரின் ராஜ விசுவாசத்தை மெச்சி, மோரூர் நாட்டின் (இன்றைய திருச்செங்கோடு உள்ளிட்ட பெரும்பகுதி) 60 காங்கேயர்களும் (பட்டக்காரர்) சேர்ந்து 61 ஆவது பட்டக்காரராக நல்லராண்டியை அங்கீகரித்து கவுரவித்தனர். இதில் மோரூர் நாட்டின் முதல் பட்டகாரரான சூர்ய காங்கேய மன்றாடியாரும் அவர்தம் பங்காளிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

இறுதியில் முத்துசாமி கவுண்டர் மறைந்த போது அவரின் பிரிவை தாங்காமல் நல்லராண்டியும் அவரின் மனைவியும் பட்டக்காரர் முத்துசாமியுடன் தீக்குளி இறங்கி உயிரை விட்டுவிட்டனர்!

(ஆதாரம்: கன்னிவாடி கன்னகுல பட்டயத்தில் உள்ளது)


முடிவுரை :

     இப்படி பல சிறப்புகளை உடைய பண்டாரம் மக்கள் தங்களின் வழிபாடுகளுக்கும், வரலாறுகளுக்கும் தொடர்பு இல்லாத  வீரசைவம் என்ற அடையாளத்தை நம்புகின்றனர். உணமையிலே பண்டாரம்  மக்களுக்கும் வீரசைவம் மற்றும் ஜங்கம், லிங்காயத் என்ற மக்களுக்கும் வழிபாடுகள், வரலாறுகள் அடிப்படையில் எந்த ஒரு தொடர்பும் இல்லை. பண்டாரம் மக்களின் குடிபெயர் வைராவி என்பதாகும். ஆகவே தமிழ் பண்டாரம்  மக்களே தெளிவு கொள்ளுங்கள். நமக்கும் வீரசைவத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்..


நன்றி....

Comments

Popular posts from this blog

பண்டாரம்