Posts

பண்டாரம்

Image
அறிமுகம் :             பண்டாரம் என்று அழைக்கப்படும்  சமூக மக்கள் தமிழ்நாட்டையும், ஈழத்தையும்  பூர்விகமாக கொண்ட தமிழ்க்குடிகளாகும். பண்டாரம் என்பது பட்டமே தவிர சாதி இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  இவர்களின் குடி பெயர் வைராவி ஆகும். வைராவி என்றால் மனஉறுதி கொண்டவர்கள் என்று பொருள். இவர்கள் பெரும்பாலும் கோவில் பூசை செய்பவர்களாகவும், பூ மாலை கட்டும் பணிகளை செய்பவர்களாகவும் உள்ளனர். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் பெரும்பான்மையான அம்மன் கோவில் பூசாரிகள் இம்மக்களே. மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ள முருகன் மற்றும் அம்மன் கோவில்களில் இவர்களே பூசாரிகள். மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் இன்றளவும் இவர்களே பூசை மேற்கொண்டு வருகிறார்கள்.   பண்டாரம் சொல் விளக்கம்:             பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் ‘ பொன், வெள்ளி, முத்து போன்ற உயர் மதிப்புடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கருவூலம்’ என்பதாகும். கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை அரசு ...

கோவம்ச பண்டாரம்

Image
                           மகான் அருள்மிகு மயிலாப்பூர் குழந்தையானந்தர்    அறிமுகம் :  கோவம்ச பண்டாரம் அல்லது கோவணாண்டி பண்டாரம் கொங்கு பகுதியில் வாழும் பண்டாரம் மக்களின் பிரிவாகும். இவர்கள் மயிலாப்பூர் குழந்தையானந்தர் என்னும் சைவ மதத்தை சேர்ந்த சித்தரை தங்களின் குலகுருவாக ஏற்றுகொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் கொங்கு பகுதியில் இருக்கும் அம்மன் கோவில்களில் பூசை மேற்கொள்ளும் மரபினர். பொதுவாக கொங்கு பகுதியில் வாழும்  மக்கள் தங்களுக்குள் உள்ள நாட்டு பிரிவுகள் கொண்டே திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.அதுபோல இவர்களும்  தங்களுக்குள் உள்ள நாட்டு பிரிவுகள் படியே திருமணம் முதலிய நிகழ்ச்சிகளை  நடத்துகின்றனர்.  கோவம்ச ஆண்டிபண்டாரம் (கோமானாண்டி,கொங்கு பண்டாரங்கள் ) நாட்டு பிரிவுகள் : 1. பூந்துறை நாடு - ஈரோடு, திருச்செங்கோடு, வட்டங்கள் 2. தென்கரை நாடு - தாராபுரம், கரூர், வட்டப்பகுதிகள் 3. காங்கேய நாடு - தாராபுரம், காங்கேயம் பகுதிகள் 4. பொங்கலூர் நாடு - பல்லடம், தாராபுரம் வட்டப்பகுதிகள் 5...